திருவள்ளூர்

பழங்குடியினருக்கு வீடு தேடி ஜாதி சான்று: ஆட்சியர் வழங்கினார்

DIN

பழங்குடியினருக்கு வீடுதேடி ஜாதி சான்று வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) கே.முத்து திங்கள்கிழமை தொடங்கி
வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், பேரண்டூர் கிராமத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் (பொறுப்பு) கே. முத்து 101 பேருக்கு பழங்குடியினருக்கான ஜாதி சான்றுகளை வழங்கினார்.
இதில், ஊத்துக்கோட்டை வட்டத்துக்கு உள்பட்ட பேரண்டூர் கிராமம், பாலவாக்கம், ஜே.ஜே. நகர், கச்சூர் கிராமங்களில் 40 குடும்பங்களைச் சேர்ந்த 101 பேருக்கு இருளர் சமுதாயத்தினருக்கான ஜாதி சான்றுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ விஜயகுமார், திருவள்ளூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ, ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் கிருபா உஷா, வருவாய்த்துறையினர், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT