முகப்பு
ரெட்டிக் குளத்தை சீரமைக்கும் பணியில் பொக்லைன் இயந்திரம்.
திருவள்ளூர்

சொந்த செலவில் குளத்தை சீரமைக்கும் பொதுமக்கள்..!

திருத்தணி அருகே, பொதுமக்களே தங்கள் சொந்த செலவில் குளத்தை சீரமைத்து வருகின்றனர். 

திருவள்ளூர்

சொந்த செலவில் குளத்தை சீரமைக்கும் பொதுமக்கள்..!

திருத்தணி அருகே, பொதுமக்களே தங்கள் சொந்த செலவில் குளத்தை சீரமைத்து வருகின்றனர். 

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:05 PM
ரெட்டிக் குளத்தை சீரமைக்கும் பணியில் பொக்லைன் இயந்திரம்.
பகிர்:

திருத்தணி அருகே, பொதுமக்களே தங்கள் சொந்த செலவில் குளத்தை சீரமைத்து வருகின்றனர். 
திருத்தணி நகராட்சி, 6 ஆவது வார்டில் உள்ளது ரெட்டிக்குளம். இக்குளத்தில் தண்ணீர் நிறைந்து இருந்தால், இங்குள்ள பெரிய தெரு, முருகப்பா நகர், கம்மாளர் தெரு ஆகிய பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும். 
இப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்னையும் தீரும்.
ஆனால், ரெட்டிக்குளம் மண் புதைந்தும், புதர்கள் மண்டியும் கிடந்தது. இதனால், குளம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வறண்டு கிடந்தது.
இந்நிலையில், இக்குளத்தை சீரமைக்கும் பணியை அப்பகுதி பொதுமக்களே தங்களது சொந்த செலவில் சீரமைத்து வருகின்றனர். பொக்லைன் இயந்திரம் மூலம் குளத்தைத் தூர் வாரி, கரைகளைப் பலப்படுத்தும் பணியை துரித வேகத்தில் செய்து வருகின்றனர். 
ஒரு மாதத்திற்குள் குளத்தை முழுமையாக சீரமைத்து விடுவோம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →