திருமணமான பெண் சாவு
ஆவடி அருகே உள்ள பட்டாபிராமில், இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ஆவடி அருகே உள்ள பட்டாபிராமில், இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
பட்டாபிராம் கோபாலபுரம் 5 ஆவது பிரதான சாலையில் வசிப்பவர் அரிபாபு. மாற்றுத்திறனாளியான இவர் பொதுப்பணித்துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் கலையரசிக்கும் (24) கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை (சுதீஷ்) உள்ளது. தற்போது கலையரசி 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
திருமணம் ஆனது முதற்கொண்டே கணவன்-மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. கணவர் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளி என்பதால் கலையரசி மனக் கசப்புடன் வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை கணவர் வேலைக்குச் சென்றவுடன், மகன் சுதீஷை மாடியில் குடியிருப்பவரிடம் கொடுத்து, சற்று நேரம் பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு, தன் வீட்டுக்குள் வந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நீண்டநேரமாகியும் கலையரசி வந்து குழந்தையை வாங்கிச்செல்லவில்லையே என்று மாடியில் குடியிருந்தவர் சந்தேகமடைந்து, கீழேவந்து பார்த்தபோது கலையரசி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து, பட்டாபிராம் காவல் ஆய்வாளர் பழனியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. சடலத்தை கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் திருவள்ளூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ விசாரித்து வருகிறார்.