முகப்பு
இந்தியா

கேரளம்: தந்தை, மகனை வேட்பாளர்களாக அறிவித்த தேசிய ஜனநாயகக் கூட்டணி! பின்னணி என்ன?

தந்தை-மகனை வேட்பாளர்களாக நிறுத்தி அதிரடி போட்டியை உருவாக்கிய என்டிஏ..

Updated On : 17 மார்ச், 2026 at 9:43 AM
பகிர்:

கேரளத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அம்மாநிலத்தின் தென் பகுதியான கோட்டயத்தில் இரு தொகுதிகளில் தந்தை, மகனை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது தேசிய ஜனநாயகக் கூட்டணி.

மாநிலத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு பிரசாரப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளம், தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியைத் தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் மார்ச் 15-ல் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், கேரளத்தின் தென்பகுதியான கோட்டயத்தில் கிறித்தவ வாக்காளர்களைக் கொண்ட இரண்டு தொகுதிகளில் தந்தையையும், மகனையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.

அவர்கள் வேறு யாருமல்ல... மூத்த அரசியல்வாதியான பி. சி. ஜார்ஜ் மற்றும் அவரது மகன் ஷோன் ஜார்ஜ் ஆகியோர் ஆவர்.

முழு கட்டுரையைப் படிக்க →