திருவள்ளூர்

சமையல் உதவியாளர் பணி: அக்.9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

DIN

திருவள்ளூர் மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 948 சமையல் உதவியாளர் பணிக்கு வரும் அக்டோபர் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மாவட்டத்தில் (ஊராட்சி ஒன்றியம் வாரியாக) எல்லாபுரம்-70, கும்மிடிப்பூண்டி-79, கடம்பத்தூர்-64, மீஞ்சூர் -98, பள்ளிப்பட்டு-75, பூவிருந்தவல்லி-64, புழல்-37, பூண்டி-88, ஆர்.கே.பேட்டை-63, சோழவரம்-54, திருத்தணி-66, திருவாலங்காடு-62, திருவள்ளூர்-36, வில்லிவாக்கம்-75, ஆவடி நகராட்சி-13, திருவள்ளூர் நகராட்சி-4 என மொத்தம் 948 சத்துணவு உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
தகுதி: பொதுப்பிரிவு, தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தால் 5-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 
பழங்குடியினராக இருந்தால் எழுதப் படிக்க தெரிந்தால் போதுமானது. 
1.7.2015-முதல் பொதுப்பிரிவு தாழ்த்தப்பட்டோருக்கு 21-40 வயதுக்குள்ளும், பழங்குடியினராக இருந்தால் 18-40 வயதுக்குள்ளும், விதவை, கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு 20-40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். 
இப்பணிக்கு மாதந்தோறும் ரூ.950-2000, தர ஊதியம் ரூ.200, என்ற விகிதத்தில் நடைமுறையில் உள்ள படிகளுடன் சேர்த்து வழங்கப்படும். 
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தங்கள் பெயர் மற்றும் செல்லிடப்பேசி எண் உள்ளிட்ட முழு விவரங்களுடன் புகைப்படம் ஒட்டி, அதனுடன் கல்விச் சான்று, மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், குடும்ப அட்டை, வருமானச் சான்று, இருப்பிடச் சான்றுகளின் நகல்கள் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் இடத்துக்கும், விண்ணப்பதாரர் குடியிருக்கும் இடமும் 3 கி.மீ. தொலைவுக்குள் இருக்க வேண்டும். 
இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களை அணுகி அறிந்து கொள்ளலாம். 
மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்தப் பகுதிகளில் உள்ள அலுவலகங்களில் வரும் 20-ஆம் தேதி முதல், அக்டோபர் 9-ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT