முகப்பு
திருவள்ளூர்

விதிமுறை மீறல்: அறநிலையத் துறை அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: முன்னாள் எம்எல்ஏ கோரிக்கை

கோயிலில் விதிமுறைகளை மீறி செயல்படும் அறநிலையத்துறை இணை ஆணையர்,  கோயில் தக்கார் ஆகியோரை பதவி நீக்கம் செய்யக்கோரி

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:14 PM
பகிர்:

கோயிலில் விதிமுறைகளை மீறி செயல்படும் அறநிலையத்துறை இணை ஆணையர்,  கோயில் தக்கார் ஆகியோரை பதவி நீக்கம் செய்யக்கோரி, முன்னாள் எம்எல்ஏ கோ.ரவிராஜ் தலைமையில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். 
திருவள்ளூரில் ஆட்சியரிடம் மனு அளித்த பின்னர், மாதவரத்தை அடுத்த வினாயகபுரத்தில் செய்தியாளர்களிடம் கோ.ரவிராஜ் பேசியதாவது:  திருவாலங்காடு பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் காரைக்கால் அம்மையாருக்கு தனி  சந்நிதியும் உள்ளது.
இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தில், திருப்பணிகளை மேற்கொள்வதற்கு அறநிலைத்
துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்பது விதிமுறை. 
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர், கோயிலின் சுற்றுச்சுவரை இடித்துவிட்டு புதிய வாசல் வைத்துள்ளனர். இதன் பின்னர், இக்கோயிலின் தல விருட்சம் தீப்பிடித்து எரிந்தது. ஆகம விதிகளை மீறியதால் விபத்துகள் நடப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். 
இவ்வாறு விதிமுறைகளை மீறி தன்னிச்சையாக செயல்
படும்  இணை ஆணையர் சிவாஜி,  தக்கார் ஜெயசங்கர் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். 
இவர்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்வரை பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →