இருசக்கர வாகன விபத்து: இளைஞர் சாவு
ஊத்துக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார். இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீஸார் கூறியதாவது:
ஊத்துக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார்.
இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீஸார் கூறியதாவது: ஊத்துக்கோட்டை அருகே உள்ள அழகிரிபேட்டை கிராமத்தைச் சேர்ந்த தாஸ் என்பவரின் மகன் ராமராஜ் (27). அவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர் பாபுடன் இருசக்கர வாகனத்தில் பெரியபாளையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, ஊத்துக்கோட்டை செஞ்சியகரம் பகுதியில் சென்றபோது, எதிரே ஊத்துக்கோட்டை கலைஞர் நகர் கொய்யாத்தோப்பு பகுதியைச் சேர்ந்த பிரசன்னா(26) ஓட்டி வந்த இருசக்கர வாகனம், ராமராஜின் வாகனம் மீது மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்தில் பிரன்னாவும், அவருடன் வந்த சத்யாவும் படுகாயமடைந்தனர். இவ்விபத்து குறித்து அறிந்த ஊத்துக்கோட்டை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஊத்துக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.