திருவள்ளூர்

பிளஸ் 2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

DIN

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவிகளுக்கு, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கேபிள் எம். சுரேஷ், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ்களை வழங்கினார்.
தமிழக அரசின் உத்தரவின்படி மார்ச் 2015-ஆம் ஆண்டு முதல் பிளஸ் 2 முடிவுகளை வெளியிட்ட பின், தேர்வர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, கல்லூரி சேர்க்கைக்கும் மற்றும் அவசரத்தேவைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதன்படி, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சழுத்தம் செய்யப்பட்டு, கல்வித்துறை மூலம் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் செய்யும் நிகழ்ச்சி திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு தலைமை ஆசிரியை டி.தெமினா கிரேனாப் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். முதுநிலை ஆசிரியை கல்பனா வரவேற்றார்.
பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கேபிள்
எம். சுரேஷ் கலந்துகொண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கினார். ஒரே நாளில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் மற்றும் மாற்றுச் சான்றிதழ் பெற்றுச் சென்றனர்.
இந் நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் குமரவேல், முதுகலை தமிழாசிரியர் வெங்கடேசன், முன்னாள் தலைமை ஆசிரியர் கே.பி.எஸ்.விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து
கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

வாக்களித்த பிரபலங்கள்!

ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

SCROLL FOR NEXT