திருவள்ளூர்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்

DIN

பெட்ரோல்,  டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கும்மிடிப்பூண்டியில் தேமுதிக கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தேமுதிக, கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம் மற்றும் நகர தேமுதிக சார்பில் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர்  
எஸ்.பி.டி.எம்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியச் செயலாளர் எம்.ரமேஷ், மேற்கு ஒன்றியச் செயலாளர் பி.எம்.ராமசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், அவைத் தலைவர் கே.ஜி.பாபுராவ், மாவட்ட நிர்வாகிகள் எஸ்.எம்.கோவிந்தராஜ், எஸ்.பி.ரமேஷ், எஸ்.வி.முருகன், ஆர்.டி.விஜயபிரசாத், திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் இரா.சு.சேகர் ஆகியோர் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன உரையாற்றினர். இதைத் தொடர்ந்து, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்தும், கும்மிடிப்பூண்டியில் மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேஸ்ட் மேனேஜ்மெண்ட் என்கிற கழிவு மேலாண்மைத் தொழிற்சாலையை அகற்றக் கோரியும், கும்மிடிப்பூண்டியில் அமைந்துள்ள நிலத்தடி நீரை உறிஞ்சும் அம்மா குடிநீர் தொழிற்சாலையை மூடக் கோரியும், இறால் பண்ணைகளால் விவசாய  நிலங்கள் பாதிக்கப்படுவதைக் கண்டித்தும், கும்மிடிப்பூண்டியில் மாநகர பேருந்து பணிமனை அமைக்கப்படாததைக் கண்டித்தும் தேமுதிகவினர் கோஷங்களை எழுப்பினர். 
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், பேரூராட்சி நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பேரூர் அவைத் தலைவர் ஆர்.டி.பிரபு நன்றி கூறினார். 
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் தேமுதிக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.பி.டி.எம்.ராஜேந்திரன் தலைமையில் தேமுதிக-வினர் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ரவியிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்து அவற்றுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT