திருவள்ளூர்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

DIN

திருவள்ளூர் அருகே குடியிருப்பு பகுதியில் மது பாட்டில்களைப் பதுக்கி, விற்பனை செய்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
இதுகுறித்து மொன்னவேடு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் மகளிர் குழு தலைவி உமாராணி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னியிடம் திங்கள்கிழமை நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: மொன்னவேடு கிராமப் பகுதியில் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில், மொன்னவேடு, எறையூர், பேட்டை ஆகிய பகுதிகளில்,  பகல் 12 மணிக்கு டாஸ்மாக் கடை திறக்கப்படும் முன்பே மது பாட்டில்களை வீட்டில் வைத்து, அதிகாலை முதல் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள ஆண்கள் நாள்தோறும் கூலி வேலைக்குச் சென்றால் மட்டுமே வருவாய் என்கிற நிலை உள்ளது. ஆனால், 24 மணி நேரமும் மது கிடைப்பதால் அவர்கள் வேலைக்குச் செல்லாமல் குடும்பத்தைத் தவிக்க விடுகின்றனர். மேலும் மது அருந்துவோர் பள்ளி அருகிலேயே பேருந்து நிறுத்தத்தில் படுத்துவிடுகின்றனர். இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகிகின்றனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT