திருவள்ளூர்

சென்னகேசவப் பெருமாள் கோயிலில் மகா குட முழுக்கு

DIN

பாகவதாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள சென்னகேசவப் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகா குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.
திருத்தணியை அடுத்த சிறுகுமி ஊராட்சி பாகவதாபுரம் கிராமத்தில் பழைமையான சென்னகேசவப் பெருமாள் கோயில் கிராம மக்கள் நிதி உதவியுடன் புனரமைக்கப்பட்டது. இதையடுத்து, கோயில் வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு, மூன்று கால ஹோம பூஜைகள் வெள்ளிக்கிழமை தொடங்கி, நடைபெற்று வந்தன.  ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு மகா பூர்ணாஹுதி   நடைபெற்றது. தொடர்ந்து, கலசப் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து கோபுரக் கலசத்துக்கு, புனித நீர் வார்க்கப்பட்டு, மகா குட முழுக்கு நடைபெற்றது.
அப்போது கோயில் முன் கூடியிருந்த பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா' என்று பக்தி பரவசத்துடன் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. மாலை சுவாமி வீதியுலா நடைபெற்றது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT