திருவள்ளூர்

கோயில் குளம் தூய்மைப் பணியில் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினர் 

DIN


பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அகத்தீஸ்வரர் கோயில் குளத்தை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை சேர்ந்தவர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கும்மமுனிமங்கலம் பகுதியில் உள்ள ஆரணி ஆற்றங்கரையோரம், சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. அகத்திய முனிவர் இங்குள்ள ஆனந்த புஷ்கரணியில் (திருக்குளம்) குளித்து ஈசனை வழிபட்டதால் இக்கோயிலில் உள்ள ஈசன் அகத்தீஸ்வரர் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இக்கோயில் குளத்தில் உள்ள மீன்கள், அண்மைக்காலமாக இறந்து மிதக்கின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. இதைத் தொடர்ந்து, பொன்னேரி பழைய பேருந்து நிலையப் பகுதியில் அமைந்துள்ள அருட்பிரகாச வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கோயில் குளத்தை தூய்மை செய்யும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
இதுகுறித்து அச்சங்கத்தின் நிர்வாகிகள் கூறியது:
பொன்னேரி நகருக்கு நிலத்தடி நீராதாரமாக விளங்கி வரும் இக்குளத்தை தூய்மை செய்யும் பணியைத் தொடங்கியுள்ளோம். குளத்தை முழுமையாக தூய்மைப்படுத்தி, சுற்றுப்பகுதி கட்டமைப்புகளுக்கு வர்ணம் பூசும் பணியும் மேற்கொள்ளப்படும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT