திருவள்ளூர்

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கிராம மக்கள் சீர்வரிசை

DIN

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிதாகச் சேர்க்கப்பட்ட 4 குழந்தைகளுக்கு மலர்மாலை அணிவித்து ஆசிரியர்கள் புதன்கிழமை வரவேற்றனர்.
திருவாலங்காடு ஒன்றியம், பூனிமாங்காடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை சீர்வரிசை வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சுபாஷினி தலைமை வகித்தார். இதில், கிராம பொதுமக்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பள்ளிக்குத் தேவையான பிரிண்டர், இருக்கைகள், வெள்ளைத் தாள், சாக்பீஸ்,  மின்விசிறி, பாய், தண்ணீர் டிரம், சில்வர் தவளை உள்ளிட்ட 
ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களைச் சேகரித்தனர்.
அந்த சீர்வரிசைப் பொருள்களுடன் மங்கள வாத்தியங்களை இசைத்தபடி பொதுமக்கள் ஊர்வலமாகப் பள்ளிக்கு வந்து 4 குழந்தைகளை வரும் கல்வியாண்டில் சேர்த்தனர். பள்ளி சார்பில் ஆசிரியர்கள் மலர் மாலை அணிவித்து வரவேற்றனர்.
உதவி ஆசிரியர்கள் மணிமேகலை, சீனிவாசன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி கோமதி உள்பட கிராம பொதுமக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

திகார் சிறையில் கேஜரிவாலை சந்திக்க சுனிதாவுக்கு அனுமதி!

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

SCROLL FOR NEXT