திருவள்ளூர்

எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல்: இளைஞர் கைது

DIN


 திருவள்ளூர் அருகே மணல் கடத்தலைத் தடுக்கச் சென்ற காவல் உதவி ஆய்வாளரை பணிசெய்ய விடாமல் தடுத்ததோடு, கொலை மிரட்டலும் விடுத்த ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளூர்-பூந்தமல்லி சாலையில் கூடப்பாக்கத்தில் இரவு நேரங்களில் வாகனங்களில் மணல் கடத்திச் செல்வதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னிக்கு ரகசிய தகவல் வந்தது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு வெள்ளவேடு போலீஸாருக்கு அவர் உத்தரவிட்டார்.
அதன்படி காவல் உதவி ஆய்வாளர் வினோத் குமார் தலைமையில் போலீஸார் வியாழக்கிழமை இரவு ரோந்து சென்றனர். அப்போது கூடப்பாக்கம் ஆற்றுக்கும், கரைக்கும் இடையே சிலர் வாகனத்தில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். அப்போது, இதைத் தடுக்க முயற்சித்த உதவி ஆய்வாளரை மணல் கடத்தலில் ஈடுபட்ட அசோக்குமார்(35) பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டலும் விடுத்தார்.  அவரை வெள்ளவேடு போலீஸார் கைது செய்தனர். மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT