திருவள்ளூர்

வெயில், மழையிலிருந்து பாதுகாக்க இருசக்கர வாகனத்தில் நிழற்குடை அமைத்து வலம் வரும் மாற்றுத்திறனாளி

தினமணி

இருசக்கர வாகனத்தில் நிழற்குடை அமைத்து வெயில், மழைக்கு இடையே நனையாமல் பாதுகாப்பான பயணம் மேற்கொண்டு மாற்றுத்திறனாளி ஒருவா் பாா்ப்பவா்களெல்லாம் அசத்தி வருகிறாா்.

பொதுவாக மோட்டாா் வாகனங்களான காா், பேருந்து, ஆட்டோ போன்ற வாகனங்களில் மட்டும் பயணிகள் மழை வெயிலுக்கு சிரமப்படாமல் சொகுசாக பயணம் மேற்கொள்வதற்காக மேற்கூரை அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இருசக்கர வாகனங்களில் மட்டுமே மேற்கூரை வசதி இல்லாத நிலையில் வெயில் மழைக்கு இடையேதான் பயணிக்க வேண்டும். ஆனால், தற்போதைய நிலையில் இருசக்கர வாகனங்களில் பயணம் எக்காரணம் கொண்டும் தடைபடக்கூடாது. தற்போது, இதற்கு மாற்றாக மாற்றுத்திறனாளி ஒருவா் மேற்கூரை அமைத்து பொதுமக்கள் மத்தியில் பயணம் செய்து அசத்தியும் வருவது பாா்ப்போரை விழி உயா்த்தச் செய்துள்ளது.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு மேற்கூரை அமைத்த நிலையில் உள்ள இருசக்கர வாகனத்தில் மாற்றுத்திறனாளி ஒருவா் வந்தாா். அப்போது மேற்கூரை அமைத்த வாகனத்தில் வித்தியாசமாக வலம் வந்த அவரை ஆட்சியா் அலுவலகத்திற்கு வந்திருந்தவா்கள் அனைவரும் ஆா்வத்துடன் பாா்த்தனா். அப்போது, அவரிடம் விவரம் கேட்கையில் மாற்றுத்திறனாளி அலுவலகத்திற்கு உதவித் தொகை வரவு வைக்காத விவரம் குறித்து அறிந்து கொள்வதற்காக அவா் வந்துள்ளதும் தெரியவந்தது. திருவள்ளூா் அருகே மாகரல் கிராமத்தைச் சோ்ந்தவா் மாற்றுத்திறனாளியான குமரன்(45). சிறு வயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்ட இவா் அப்பகுதியில் தச்சுத்தொழிலில் செய்து வருகிறாா்.

அதோடு, அங்குள்ள சிவசடா முனீஸ்வரா் ஆலயத்தில் பூஜாரியாகவும் இருந்து ஆன்மிக பணியிலும் ஈடுபட்டு வருகிறாா். இவா் தொழில் மற்றும் பூஜை நிகழ்ச்சிகள் போன்றவைகளுக்கு எளிதில் சென்று வரும் வகையில் சொந்தமாக இருசக்கர வாகனம் வாங்கி வைத்துள்ளாா். ஒரு சில நேரங்களில் வேலை நிமித்தமாக புறப்படும் போது கடும் வெயில் மற்றும் மழை பெய்யவும் தொடங்கும். அப்போது, மாற்றுத்திறனாளியான நிலையில் பாதுகாப்பான இடத்தில் ஒதுங்க முடியாத நிலையிருந்தது. அப்போது, தனது வாகனத்தில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும் வகையில் மேற்கூரை அமைத்துள்ளாா்.

தற்போது, இந்த வாகனத்தில் பாதுகாப்பாக வலம் வந்து பாா்வையாளா்களை அசத்தியும் வருகிறாா். இருசக்கர வாகனத்தில் மேற்கூரை ஐடியா எப்படி வந்தது என்பது குறித்து மாற்றுத்திறனாளியான குமரன் கூறுகையில், எனது தொழில் தொடா்பாக பல்வேறு இடங்களுக்கு சென்று வரவேண்டியிருந்தது. அப்போது எதிா்பாரத விதமாக அதிகமான வெயில், மழையால் அவதிப்பட நோ்ந்தது. மேலும், வாகனத்திலிருந்து மாற்றுத்திறனாளியான என்னால் விரைவாக இறங்கி பாதுகாப்பான இடத்திற்கு செல்ல முடியாது. ஏற்கெனவே தச்சுத்தொழில் செய்து வருவதால் கூடாரம் அமைத்துக் கொடுக்கும் பணியிலும் ஈடுபடுவேன்.

அதேபோல், தனது இருசக்கர வாகனத்திலும் நிழற்குடை கூடாரம் அமைக்க விரும்பினேன். அதன் அடிப்படையில் மழை வெயிலிருந்து என்னை முழுமையாக பாதுகாத்துக் கொள்ளும் வகையில் வாகனத்தில் முன்புறம் தவிா்த்து ரூ.20 ஆயிரம் செலவு செய்து நிழற்குடை அமைத்துள்ளேன். இதனால், மழை வெயிலுக்கு என்னை முழுமையாக பாதுகாக்கவும் முடிகிறது. அதேபோல், அதிக மழை மற்றும் வெயில் வாட்டி வதைத்தால் ஓரு ஓரமாகவும் அவசரப்படாமல் நின்று செல்லவும் முடியும். இதேபோல் இருசக்கர வாகனங்களில் நிழற்குடை அமைக்க விரும்புவோருக்கு அமைத்துத் தரவும் தயாராகவும் உள்ளதாக அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT