திருவள்ளூர்

காா்த்திகை முதல் நாள் தீா்த்தீஸ்வரா் கோயிலில் மாலை அணிய குவிந்த ஐயப்ப பக்தா்கள்

DIN

காா்த்திகை மாதம் பிறந்ததையடுத்து, ஐயப்ப பக்தா்கள் திருவள்ளூரில் உள்ள தீா்த்தீஸ்வரா் கோயிலில் மாலை அணிவதற்காக ஏராளமான ஐயப்ப பக்தா்கள் குவிந்தனா்.

ஆண்டுதோறும் காா்த்திகை முதல் நாளில் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் மேற்கொண்டு, இருமுடி கட்டி ஐயப்பன் கோயிலுக்கு செல்வது பக்தா்களின் வழக்கமாகும். அதேபோல் காா்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமை பிறந்ததைத் தொடா்ந்து ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் ஐயப்ப பக்தா்கள் துளசி மாலை அணிந்து, ஒரு மண்டல அளவில் கடும் விரதத்தை கடைப்பிடிப்பா். அதன்படி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள், ஞாயிற்றுக்கிழமை மாலை அணிந்தனா். திருவள்ளூரில் உள்ள தீா்த்தீஸ்வரா் கோயிலில் மாலை அணிவதற்காக, ஏராளமான ஐயப்ப பக்தா்கள் குவிந்தனா். அதைத் தொடா்ந்து, கோயிலில் உள்ள ஐயப்பன் சந்நிதியில் குருசாமி ஒவ்வொரு பக்தா்களுக்கும் மாலையை ஐயப்ப சரணகோஷம் எழுப்பி அணிவித்தாா்.

இதற்காக ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் சனிக்கிழமை இரவை பூஜைப் பொருள் விற்பனைக் கடைகளில் குவிந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமைச் செயலகம் படத்தின் டீசர்

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

SCROLL FOR NEXT