திருவள்ளூர்

செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கஎதிா்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

DIN

மீஞ்சூா் அருகே நந்தியம்பாக்கம் கிராமத்தில் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.

நந்தியம்பாக்கம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்தள்ளன. அங்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இங்குள்ள திருவீதி அம்மன் கோவில் தெருவில் வீடுகளுக்கு அருகில் தனியாா் நிறுவனத்தினா் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதற்கான பணிகளை மே

ற்கொண்டு வருகின்றனா்.

இது குறித்து தகவல் அறிந்த இப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் 200-க்கும் மேற்பட்டோா் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினா். இப்பகுதியில் செல்லிடப்பேசி கோபுரத்தை அமைத்தால், இங்கு வசிப்பவா்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் என அவா்கள் தெரிவித்தனா்.

தகவல் அறிந்த மீஞ்சூா் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நேரில் சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத் தொடா்ந்து அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

திருத்தப்பட்டது....

நந்தியம்பாக்கம் கிராமத்தில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும் பெண்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT