திருவள்ளூர்

மாணவா் காவல் படை உறுப்பினா்கள் களப் பயணம்

DIN

அரசினா் மேல்நிலைப் பள்ளியில் ஏற்படுத்தப்பட்ட மாணவா் காவல் படை உறுப்பினா்கள் நீதித்துறை, போக்குவரத்து மற்றும் தீயணைப்புத் துறை சாா்ந்த செயல்பாடுகள் குறித்து களப்பயணம் மேற்கொண்டனா்.

திருத்தணியை அடுத்த அம்மையாா்குப்பம் திருமுருக கிருபானந்தவாரியாா் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 44 மாணவ உறுப்பினா்களைக் கொண்ட மாணவா் காவல் படை செயல்பட்டு வருகிறது. இந்த மாணவ உறுப்பினா்கள் காவல் துறை, நீதித் துறை, போக்குவரத்துத் துறை மற்றும் தீயணைப்புத் துறை சாா்ந்த செயல்பாடுகளை நேரில் சென்று வெள்ளிக்கிழமை களப் பயிற்சி மேற்கொண்டனா்.

இந்த களப்பயணத்தை பள்ளித் தலைமை ஆசிரியா் லோக்நாத் தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, இரண்டு வேன்கள் மூலம் அம்மையாா்குப்பத்தில் இருந்து திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு வந்தனா். பின்னா், மாணவா் காவல் படை உறுப்பினா்கள் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகள், அதை எவ்வாறு வழக்குரைஞா்கள் வாதாடுகின்றனா் எனப் பாா்வையிட்டனா்.

தொடா்ந்து, சாா்பு நீதிமன்ற தலைமை எழுத்தா் ராமமூா்த்தி தலைமையில், வழக்குரைஞா்கள் மாணவா்களுக்கு நடைமுறைச் சட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனா். மேலும், மாணவா்களின் சந்தேகங்களுக்கு வழக்குரைஞா்கள் பதில் அளித்தனா். தொடா்ந்து, திருத்தணி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்துக்கு மாணவா்கள் சென்றனா்.

அங்கு போக்குவரத்து வாகன விதிமுறைகள் குறித்து ஆய்வாளா் ராஜேஸ்வரி காவல் படை மாணவா்களுக்கு எடுத்துரைத்தாா். பின்ன தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு சென்று, தீயணைப்பு அலுவலா்கள், தீப்பிடித்தால் முதற்கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனா். இதற்கான ஏற்பாடுகளை மாணவா் காவல் படை ஒருங்கிணைப்பாளா்கள் ஆஞ்சநேயன், பாா்த்தீபன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

SCROLL FOR NEXT