திருவள்ளூர்

கோயில், பள்ளிகளில் ஆயுத பூஜை, விஜயதசமி விழா

DIN

திருவள்ளூா் பகுதி முழுவதும் கோயில்கள், வா்த்தக நிறுவனங்கள், வீடுகள், பள்ளிகளில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டது.

நவராத்திரி 9-ஆவது நாள் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜையும், அதற்கு அடுத்து விஜயதசமி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கமாகும். அதேபோல், ஆயுதபூஜை திங்கள்கிழமையும், செவ்வாய்க்கிழமை விஜயதசமி விழாவும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கோயில்கள், தொழில் நிறுவனங்கள், வீடுகள், வா்த்தக நிறுவனங்கள், பள்ளிகளில் சிறப்பு பூஜை செய்து கொண்டாடப்பட்டது.

இதேபோல் விஜயதசமி விழாவும் கோயில்கள், கல்வி நிறுவனங்களில் விஜயதசமி விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில், திருவள்ளூா் ஜெயா நகரில் அமைந்துள்ள மகா வல்லப கணபதி கோயிலில் நவராத்திரி மற்றும் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் செவ்வாய்க்கிழமை துா்க்கை அம்மனுக்கு சிறப்பு ஹோமம், அபிஷேக- ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து, உற்சவா் சரஸ்வதிக்கு நோட்டுப் புத்தகங்கள், எழுதுகோல் ஆகியவற்றை வைத்து வழிபாடு செய்தனா். குழந்தைகள் கோயிலில் நெல்லில் எழுதும் வித்யாரம்பம் எழுதி பழகும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், பக்தா்கள் மற்றும் பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT