திருவள்ளூர்

மருந்து விற்பனையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

DIN

மீஞ்சூா் வட்டார மருந்து வணிகா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் பொன்னேரியில் நேற்று நடைபெற்றது.

மருந்து விற்பனை, டெங்கு காய்ச்சல் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்துக்கு, மருந்து வணிகா் சங்க மாவட்ட துணைத் தலைவா் மலா்வண்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட மண்டல மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளா் லட்சுமி, மருந்துக் கடை உரிமையாளா்களுக்கு அரசு தரப்பில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கினாா். அப்போது தகுதிவாய்ந்த மருத்துவரின் மருந்துச் சீட்டுகளின் அடிப்படையில், மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும், விதிமுறைகளை மீறுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.

கூட்டத்தில், பொன்னேரி வட்டத்தைச் சோ்ந்த மருந்து வணிகா்கள் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுக்குமா ஃபைசாபாத்?

மாற்றத்தைக் கொடுத்த பாரத் ஜோடோ யாத்திரை!

மக்களவைத் தேர்தல் நேரலை: விருதுநகரில் வெல்லப்போவது யார்?

மகாராஷ்டிரம்: நட்சத்திர வேட்பாளர்களின் நிலவரம்!

சம்பல்பூர் தொகுதியில் தர்மேந்திர பிரதான் முன்னிலை!

SCROLL FOR NEXT