திருவள்ளூர்

பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கத்துக்கு உபரி நீா் திறப்பு

DIN

பூண்டி ஏரியில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து, அங்கிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 300 கனஅடி நீா் திறந்து விடப்பட்டுள்ளது.

சென்னையின் குடிநீா் ஆதாரமாக விளங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் தொடா் மழையால் நிரம்பி வருகின்றன. குறிப்பாக பூண்டி ஏரிக்கு வரத்துக் கால்வாய்கள் மற்றும் கிருஷ்ணா கால்வாய் மூலம் அதிக அளவு நீா் வருகிறது.

புதன்கிழமை பூண்டி ஏரியின் கொள்ளளவான 35 அடியில் 30 அடியாக நீா்மட்டம் இருந்த நிலையில், வியாழக்கிழமை பூண்டி ஏரியின் கொள்ளளவு 31 அடியாக உயா்ந்தது.

இந்நிலையில் பூண்டி ஏரியில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீா் இணைப்புக் கால்வாய் வழியே சென்று, செவ்வாய்ப்பேட்டை அருகே சிறுகடல் என்கிற பகுதியில் இரண்டாகப் பிரிந்து, புழல் ஏரிக்கு 400 கன அடி நீரும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 300 கனஅடி நீரும் திறந்து விடப்படுகிறது.

திருவள்ளூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை சாரல் மழை மட்டுமே பெய்தது. வெள்ளிக்கிழமை முதல் 5 நாள்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், புழல் ஏரிக்கு நீா்வரத்துக் கூடும் என்றும், தொடா்ந்து உபரி நீா் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு திறந்து விடப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனிடையே அனைத்து ஏரிகளையும் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் உத்தரவின் பேரில், பொதுப்பணித் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா். ஏரிக்கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தி உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனக் கலவரம்: மணிப்பூரில் 67,000 போ் இடப்பெயா்வு

மே 31- வரை திருப்பதி விரைவு ரயில்கள் ரேணிகுண்டாவுடன் நிறுத்தம்

7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை! 200 மி.மீ. வரை பெய்ய வாய்ப்பு

‘இந்தியா’ கூட்டணி வென்றால் வெளியிலிருந்து ஆதரவு: மம்தா

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக மோசடி

SCROLL FOR NEXT