திருவள்ளூர்

புழல் சிறையில் செல்லிடப்பேசிகள் பறிமுதல்

DIN


 புழல் மத்திய சிறையில் கைதிகளிடம் இருந்த செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புழல் மத்திய சிறையில் தண்டனைப் பிரிவில் 700-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிலர் சிறைக்குள் செல்லிடப்பேசிகளை பயன்படுத்தி வருவதாக சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறை காவலர்கள் உதவியுடன் ஞாயிற்றுக்கிழமை அதிரடி சோதனை நடத்தினர். 
அப்போது இரண்டு ஆயுள் தண்டனைக் கைதிகள் செல்லிடப்பேசிகளை பயன்படுத்தும்போது பிடிபட்டனர். இதில் கன்னியாகுமரியை சேர்ந்த கேப்ரவேல் (49), தர்மபுரியை சேர்ந்த சுந்தரமூர்த்தி(53) ஆகியோரிடம் இருந்து 2 செல்லிடப்பேசிகள், சிம்கார்டுகள், சார்ஜர் ஆகியவற்றை சிறைத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் புழல் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகார் செய்தார். புழல் காவல் ஆய்வாளர் தங்கதுரை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

SCROLL FOR NEXT