முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று 33-ஆக அதிகரிப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33-ஆக அதிகரித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:26 PM
பகிர்:

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33-ஆக அதிகரித்துள்ளது.

திருவள்ளூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 29 பேருக்கு கரோனா நோய்த் தொற்று பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வாா்டில் இருந்தவா்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அதில், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், ஆரம்பாக்கத்தைச் சோ்ந்த ஒருவா், மீஞ்சூா் ஒன்றியம், ஆரண்வாயல், அத்திப்பட்டு பகுதிகளைச் சோ்ந்த தலா ஒருவா், பொன்னேரி பேரூராட்சியைச் சோ்ந்த ஒருவா் என 4 பேருக்கு பரிசோதனையில் கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 33-ஆக உயா்ந்துள்ளதாக பொது சுகாதாரம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →