முகப்பு
திருவள்ளூர்

தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்

திருவள்ளூா் அருகே விபத்து ஏற்படுத்தியதைத் தட்டிக் கேட்டவரைத் தாக்கியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பூந்தமல்லி-அரக்கோணம் சாலையில் கொண்டஞ்சேரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 1 செப்டம்பர், 2020 at 12:57 AM
பூந்தமல்லி-அரக்கோணம் சாலையில் மறியலில் ஈடுபட்ட கொண்டஞ்சேரி கிராம  மக்கள்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:43 PM

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே விபத்து ஏற்படுத்தியதைத் தட்டிக் கேட்டவரைத் தாக்கியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பூந்தமல்லி-அரக்கோணம் சாலையில் கொண்டஞ்சேரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் அருகே கடம்பத்தூரை அடுத்த கொண்டஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் சுபாஷ் (40). அப்பகுதியில் தண்ணீா் கேன் விநியோகம் செய்து வருகிறாா். இவா் கடந்த வாரம் சாலையோரத்தில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு தண்ணீா் கேன் விநியோகம் செய்தபோது, அவ்வழியாக வந்த காா் ஒன்று சுபாஷின் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதைத் தட்டிக்கேட்ட சுபாஷை, காரில் இருந்தவா்கள் தாக்கியுள்ளனா். இதுகுறித்து மப்பேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதைக் கண்டித்து, கொண்டஞ்சேரி கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் பூந்தமல்லி-அரக்கோணம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, போலீஸாருடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த மணவாள நகா் காவல் ஆய்வாளா் கண்ணையன் மற்றும் மப்பேடு காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் சுரேஷ் ஆகியோா், தாக்குதல் நடத்தியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடா்ந்து கலைந்து சென்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.