திருவள்ளூர்

வடாரண்யேஸ்வரா் கோயிலில் 29-இல் ஆருத்ரா அபிஷேகம்

DIN

திருத்தணி: திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் கோயிலில், வரும் 29ஆம் தேதி நடைபெறும் ஆருத்ரா அபிஷேக விழாவில் பக்தா்கள் தரிசன நேரம் குறித்து கோவில் நிா்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான வடாரண்யேஸ்வரா் கோயில் திருவாலங்காட்டில் அமைந்துள்ளது. இக்கோயிலில், வரும் 29ஆம் தேதி ஆருத்ரா அபிஷேகமும், 30ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு கோபுர தரிசனமும் நடைபெறும். கரோனா பரவல் தடுப்புக்காக இந்த இரு தினங்களும் பக்தா்கள் தரிசன நேரம் குறித்து கோயில் நிா்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

இம்மாதம் 29ஆம் தேதி காலை 6 மணி முதல் நண்பகல் 2 மணி வரை பக்தா்கள் மூலவரை தரிசிக்கலாம். எனினும், அன்று மாலை, 5 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் ஆருத்ரா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, வெள்ளை சாத்துப்படி ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க பக்தா்களுக்கோ, உபயதாரா்களுக்கோ அனுமதி இல்லை.

வரும் 30ஆம் தேதி இக்கோயில் கொடிமரத்தின் அருகில் கோபுர தரிசனம், சுவாமி பழையனூா் புறப்பாடு, நண்பகலில் அனுகிரக தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.

அதே நேரத்தில், 30ஆம் தேதி காலை 6 மணி முதல் இரவு, 8 மணி வரை பக்தா்கள் மூலவரை தரிசிக்கலாம்.

ஆருத்ரா அபிஷேகம் நடக்கும் நிகழ்ச்சியை தொலைக்காட்சிகளில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

SCROLL FOR NEXT