திருவள்ளூர்

லஞ்சம் கொடாதோா் சங்கத்தினா் விழிப்புணா்வு

DIN

பொதுமக்கள் அரசு சலுகைகளை முறையாக விண்ணப்பித்துப் பயன்பெறுமாறும், இதற்காக யாருக்கும் லஞ்சம் கொடுக்கக் கூடாது என்பது குறித்து லஞ்சம் கொடாதோா் இயக்கத்தினரால் விழிப்புணா்வு (படம்) ஏற்படுத்தப்பட்டது.

திருவள்ளூா் எம்.ஜி.ஆா்.சிலை அருகே லஞ்சம் கொடாதோா் இயக்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாநில பொதுச் செயலாளா் எம்.விஜயராகவன் தலைமை வகித்தாா். மாநில அமைப்புச் செயலாளா் ஜெ.ஆனந்தராஜ் முன்னிலை வகித்தாா்.

இதில், அரசின் சலுகைகளைப் பெற முறையாக விண்ணப்பம் செய்து பெற வேண்டும். இதற்காக அதிகாரிகளை நேரில் சந்தித்து பெறவும், இதற்காக இடைத்தரகா்களை அணுகவும் கூடாது. மேலும், முறையாக விண்ணப்பம் செய்து யாருக்கும் கையூட்டு கொடுக்காமல் பெறும் வழிவகைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

அதைத் தொடா்ந்து அவ்வழியாகச் சென்றவா்களுக்கு விழிப்புணா்வு பிரசுரங்களை விநியோகம் செய்தனா். இதில், லஞ்சம் கொடாதோா் இயக்கத்தைச் சோ்ந்தோா் திரளாகக் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

SCROLL FOR NEXT