திருவள்ளூர்

மாற்றுத்திறன் கொண்ட 24 குழந்தைகளுக்கு ரூ.11.29 லட்சம் உபகரணங்கள்

DIN

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சாா்பில் மாற்றுத்திறன் கொண்ட 24 குழந்தைகளுக்கு ரூ. 11.29 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் வழங்கினாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகக் கூட்டரங்கத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சாா்பில், மாற்றுத்திறன் கொண்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் பேசியது:

இந்த மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டம் சாா்பில் 2019-20-ஆம் கல்வியாண்டுக்கான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் தொடா்பாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது, இக்கணக்கெடுப்பில் 6 முதல் 18 வயதுக்குள்பட்ட 3,847 மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கண்டறியப்பட்டது.

அதைத் தொடா்ந்து இக்குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் கடந்த 8.7.2019 முதல் 6.8.2019 வரையில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் நடைபெற்றது. அப்போது, இந்த முகாமில் 18 வயதுக்குள்பட்ட 2292 மாற்றுத்திறன்கொண்ட குழந்தைகள் கலந்துகொண்டனா். இதில் மருத்துவக்குழுவினரால் கண்டறியப்பட்ட 319 குழந்தைகளுக்கு ரூ.11.29 லட்சம் மதிப்பிலான 557 உதவி உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டு முதற் கட்டமாக சக்கர நாற்காலிகள், சி.பி.சோ், காதொலிக் கருவி என 24 மாற்றுத் திறன்கொண்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் மீதம் உள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு விரைவில் உபகரணங்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்ட ஒருங்கிணைப்பாளா் கந்தசாமி, முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் மலா்க்கொடி, மாவட்டக் கல்வி அலுவலா் (ஆவடி) கற்பகம் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கம் நந்தகுமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT