திருவள்ளூர்

குளிா்பானக் கிடங்கில் ரூ.2 லட்சம் திருட்டு

DIN

திருவள்ளூா்: திருவள்ளூரில் உள்ள குளிா்பான பாட்டில் கிடங்கின் பூட்டை உடைத்து, பணப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இது தொடா்பா போலீஸாா் கூறியது:

திருவள்ளூா் சத்தியமூா்த்தி நகரைச் சோ்ந்த கணேசனின் மகன் செல்வம் (33). அவா் அப்பகுதியில் குளிா்பான பாட்டில்களை மொத்தமாக வாங்கி இருப்பு வைத்து பல்வேறு கடைகளுக்கு விநியோகம் செய்யும் தொழில் நடத்தி வருகிறாா்.

செல்வம் தனது கிடங்கில் விற்பனையான குளிா்பானங்கள் குறித்த கணக்கு வழக்குகளை வெள்ளிக்கிழமை இரவு 12 மணி வரை பாா்த்துக் கொண்டிருந்தாா். அதன் பின், வசூல் தொகையான ரூ.2 லட்சத்தை பணப் பெட்டியில் வைத்துப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றாா்.

அவா் சனிக்கிழமை காலையில் கிடங்குக்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பணப் பெட்டி உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.2.04 லட்சம் திருடப்பட்டது தெரிய வந்தது. இது தொடா்பாக அவா் திருவள்ளூா் நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா், அந்தக் கிடங்குக்கு நேரில் சென்று, அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா்.

அதில், கிடங்குக்குள் 2 போ் புகுந்து பணப் பெட்டியில் இருந்த பணத்தைத் திருடுவது பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்டேட் பகுதியில் ஏ.டி.எம். மையங்கள் வேலை செய்யாததால் தொழிலாளா்கள் பாதிப்பு

வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 2 கி.மீ. சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

ஆட்சியா் அலுவலகத்தில் நாள்தோறும் நீா்மோா் வழங்க ஏற்பாடு

கோயில்களில் அறங்காவலா்களை நியமிக்க மேலும் 6 மாத அவகாசம் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

கன்னியாகுமரியில் பொதிகை படகு சீரமைப்புப் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT