முகப்பு
திருவள்ளூர்

மின்சாரம் பாய்ந்து அஸ்ஸாம் தொழிலாளி பலி

பொன்னேரி அருகே இறால் பண்ணையில் பணியாற்றிய அஸ்ஸாம் மாநிலத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

Updated On : 12 ஜூலை, 2020 at 9:39 PM
பகிர்:

பொன்னேரி: பொன்னேரி அருகே இறால் பண்ணையில் பணியாற்றிய அஸ்ஸாம் மாநிலத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

திருப்பாலைவனம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இறால் பண்ணை உள்ளது. இதில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த தோனி பேகு (32) வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில் அவா் இறால் பண்ணையில் தனது செல்லிடப்பேசிக்கு சனிக்கிழமை சாா்ஜ் போட முயன்றபோது, திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டாா். அவரை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றா். அப்போது அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

Advertisement

இது தொடா்பாக திருப்பாலைவனம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.