முகப்பு
திருவள்ளூர்

சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவிகளுக்கு அரிசி, பருப்பு விநியோகம்

புழல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள  அரசு பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவிகளுக்கு அரசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் செவ்வாய் கிழமை விநியோகம் செய்யப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:56 PM
பகிர்:

புழல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள  அரசு பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவிகளுக்கு அரசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் செவ்வாய் கிழமை விநியோகம் செய்யப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டம், புழல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட  புள்ளிலைன், கிராண்ட்லைன், விளாங்காடுபாக்கம், அழிஞ்சிவாக்கம், வடகரை உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள அரசு பள்ளிகள் பொதுமுடக்கம் காரணமாக இயங்கவில்லை. இதையடுத்து, சத்துணவு சாப்பிட்டு வந்த மாணவ, மாணவிகளுக்கு உணவின்றி இருந்தனர். 

இதையடுத்து புழல் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தங்கமணி திருமால் தலைமையில் அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கினார். இதில் புழல் ஊராட்சி ஒன்றிய ஆணையர் அமிழ்தமன்னன் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் இருந்தனர். 

இந்த திட்டத்தால் 500க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பயன் அடைந்தனர்.
 
முழு கட்டுரையைப் படிக்க →