கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி
கட்டாக் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 நோயாளிகள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கட்டாக் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 நோயாளிகள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவின் கட்டாக்கில் அரசு நடத்தும் எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் திங்கள்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
தீயணைப்புத் துறை அதிகாரிகள், மருத்துவமனை ஊழியர்கள், போலீஸார் மற்றும் நோயாளிகளின் உதவியாளர்களுடன் இணைந்து ஐசியு-வில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளை மீட்டு எஸ்சிபி மருத்துவமனையின் மற்ற பிரிவுகளுக்கு மாற்றினர்.
Advertisement
Advertisement
எனினும், இந்த தீ விபத்தில் 10 நோயாளிகள் பலியாகினர். நோயாளிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டபோது 11 மருத்துவமனை ஊழியர்கள் தீக்காயமடைந்தனர். முதல்வர் மோகன் சரண் மாஜி, சுகாதாரத்துறை அமைச்சர் முகேஷ் மகாலிங்குடன் மருத்துவமனைக்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.
மேலும், அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளையும் அவர் சந்தித்து ஆறுதல் கூறினார். காயமடைந்த நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.
தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு உடனடியாக அறிக்கை அளிக்க வேண்டும் என தீயணைப்புத் துறை தலைவரிடம் முதல்வர் மோகன் சரண் மாஜி கோட்டுக்கொண்டார்.
At least ten patients were killed after a major fire erupted in an ICU in Odisha government-run SCB Medical College and Hospital here in the wee hours of Monday, Chief Minister Mohan Charan Majhi said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.