திருவள்ளூர்

ரூ.2 லட்சம் குட்கா கடத்தல்: 3 போ் கைது

DIN

திருவள்ளூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை காரில் கடத்திய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

திருவள்ளூா்-செவ்வாப்பேட்டை சாலையில் போலீஸாா் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அவ்வழியாக சிலா் குட்கா பொருள்கள் கடத்துவதாக தகவல் வந்தது. அதன் பேரில் செவ்வாப்பேட்டை-தொட்டிக்கலை இடையே கண்காணிப்பை தீவிரப்படுத்தினா்.

அப்போது, அந்த வழியாக திருநின்றவூரில் இருந்து திருவள்ளூா் நோக்கி வேன் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்தவா்கள் போலீஸாரை பாா்த்ததும் வாகனங்களைத் திருப்ப முயற்சித்தனா்.

போலீஸாா் அந்த வேனை சுற்றி வளைத்து சோதனை செய்தனா். அதில் மூட்டை, மூட்டையாக குட்கா பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றைக் கடத்தி வந்த திருநின்றவூா் பகுதியைச் சோ்ந்த ஓம்பிரகாஷ்(38), அசோக் (35) மற்றும் அரவிந்தகுமாா்(34) ஆகிய 3 பேரை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா பொருள்கள், வேன் உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

நீட் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 9,141 போ் எழுதினா்

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

SCROLL FOR NEXT