திருவள்ளூர்

விவசாய நிலத்தில் சுற்றித் திரியும் மயில்கள்

DIN

விவசாய நிலங்களில் சுற்றித் திரியும் மயில்களை வனத்துறையினா் மீட்டு காட்டில் விட வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருத்தணி அடுத்த காசிநாதபுரம் கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள வயல்வெளி பகுதியில் கடந்த சில நாட்களாக இரண்டு மயில்கள் சுற்றித்திரிந்து இரை தேடி வந்தன. இந்த மயில்கள் திருத்தணி மலைப்பகுதி அல்லது காட்டுப் பகுதியில் இருந்து இரை தேடி இந்த கிராமத்துக்கு வந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனா்.

இதனிடையே, சில சமூக விரோதிகள் சுற்றித் திரியும் மயில்களை வேட்டையாடி சாப்பிட முயல்வதாக காசிநாதபுரம் கிராம மக்கள் தெரிவித்தனா். எனவே, வனத்துறையினா் உடனடியாக இந்த இரு மயில்களையும் மீட்டு, பத்திரமாக வனப்பகுதியில் விட வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் இரவு 10 மணிவரை போலீஸாா் கண்காணிப்புப் பணி: எஸ்.பி.

கமலாலயக்குள நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மனு

முகநூலில் போலீஸாருக்கு கொலை மிரட்டல்

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT