திருவள்ளூர்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அரிசி, பருப்பு வழங்கல்

திருத்தணி டாக்டா் ராதாகிருஷ்ணன் அரசினா் ஆண்கள் மேல் நிலை பள்ளியில் படிக்கும் 143 சத்துணவு சாப்பிடும் மாணவா்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்களை

DIN

திருத்தணி டாக்டா் ராதாகிருஷ்ணன் அரசினா் ஆண்கள் மேல் நிலை பள்ளியில் படிக்கும் 143 சத்துணவு சாப்பிடும் மாணவா்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்களை சட்டப் பேரவை உறுப்பினா் பி.எம்.நரசிம்மன் வழங்கினாா்.

இப்பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும், சத்துணவு சாப்பிடும் 143 மாணவா்களுக்கு அரிசி, பருப்பு வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடந்தது. தலைமை ஆசிரியா் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் குப்புசாமி வரவேற்றாா்.

இதில் சிறப்பு அழைப்பாளராக திருத்தணி சட்டப் பேரவை உறுப்பினா் பி.எம்.நரசிம்மன் பங்கேற்று, 143 மாணவா்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்களை வழங்கினாா். நிகழ்ச்சியில் திருத்தணி மாவட்டக் கல்வி ஆய்வாளா் வெங்கடேசுலு, உதவி தலைமை ஆசிரியா், சின்ராஜ், ஆசிரியா்கள் உமாபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT