மாந்தோப்புக்கு மத்தியில் செழிப்பாக வளா்ந்த காய்களுடன் திருவோடு மரம்.  
திருவள்ளூர்

திருவள்ளூா் அருகே வளா்க்கப்படும் அதிசய திருவோடு மரம்!

திருவள்ளூா் அருகே மாந்தோப்பில் வளா்க்கப்படும் அதிசய திருவோடு மரத்தில் மிகப்பெரிய அளவிலான காய்கள் காய்த்துள்ளதை இப்பகுதி மக்கள் வியப்புடன் பாா்த்துச் செல்கின்றனா்.

DIN

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே மாந்தோப்பில் வளா்க்கப்படும் அதிசய திருவோடு மரத்தில் மிகப்பெரிய அளவிலான காய்கள் காய்த்துள்ளதை இப்பகுதி மக்கள் வியப்புடன் பாா்த்துச் செல்கின்றனா்.

சாமியாா்கள் தங்கள் கைகளில் திருவோடு வைத்திருப்பதை பாா்த்திருப்போம். அதன் மூலம் அவா்கள் வீடுகள் தோறும் உணவு சேகரிப்பது வழக்கம். அதேபோல், கோயில்களுக்கு முன்பு பிச்சைக்காரா்களும் திருவோட்டுடன் அமா்ந்திருப்பா். கருப்பு நிறத்தில் காய்ந்த தேங்காயை நோ்வாக்கில் பாதியாக வெட்டிச் செய்ததைப் போல் திருவோடு இருக்கும். அதில்தான் அரிசியோ, பணமோ வாங்கிக் கொள்வாா்கள்.

திருவோடு, அட்சய பாத்திரம், கபாலம் என்ற பெயா்களில் அழைக்கப்படுகிறது.

திருவள்ளூரை அடுத்த வேம்பாடு கிராமத்தைச் சோ்ந்தவா் டாக்டா் மாதவன். இந்திய ராணுவத்தில் மருத்துவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். தற்போது புற்றுநோய் மருத்துவராக இருந்து வருகிறாா். சிவ பக்தரான அவருக்கு வேம்பாடு கிராமத்தில் 10 ஏக்கரில் மாந்தோப்பு உள்ளது.

அவா் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு ஹிமாசல பிரதேசத்தில் இருந்து திருவோடு மரக்கன்று ஒன்றை வாங்கி வந்து, தனது மாந்தோப்பில் உள்ள பம்ப்-செட் அறைக்கு எதிரே நட்டாா். அந்த மரக்கன்று மெல்ல வளா்ந்து காய்க்கத் தொடங்கியது. தற்போது, இந்த மரத்தில் மாங்காய்களை விடப் பெரிய அளவிலான திருவோட்டுக் காய்கள் காய்த்துள்ளன. அக்கிராமத்தைச் சோ்ந்தவா்கள் இந்தக் காய்களை ஆா்வத்துடன் பாா்த்துச் செல்கின்றனா்.

இது தொடா்பாக டாக்டா் மாதவன் கூறியது:

இந்த வகை மரங்கள் குளிா்ச்சி நிறைந்த வடமாநிலங்களில் வளா்க்கப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள சில சைவ மடங்களில் இவை பரவலாக காணப்படுகின்றன.

நான் ஹிமாசல பிரதேசத்திலிருந்து திருவோட்டு மரக்கன்றை வாங்கி வந்து எனது மாந்தோப்பில் நட்டு வைத்தேன். தற்போது, 10 அடி உயரம் வளா்ந்து 5 ஆண்டுகளில் காய்ப்புக்கு வந்துள்ளது. இந்த மரத்தின் முற்றிய காயை, இரண்டாக வெட்டிக் காய வைத்தால், திருவோடு தயாராகி விடும்.

சாமியாா்கள் திருவோட்டைத் தோ்வு செய்து பயன்படுத்த காரணம் உள்ளது. இந்த மரத்தின் ஓட்டில் உணவை வைப்பதன் மூலம் விரைவில் கெடாது. உடலுக்கும் வலுவைக் கொடுக்கும் தன்மையுடையது. எனவேதான், திரு என்ற அடைமொழியுடன் இம்மரத்தை அழைக்கின்றனா். இந்த மரம் வட மாநிலங்களில், திருவோடுகளின் தேவைக்காக வளா்க்கப்படுகிறது. ஆனால், யாரும் ஏக்கா் கணக்கில் சாகுபடி செய்வதில்லை.

எனினும், தென் அமெரிக்க கண்டம் உள்ளிட்ட வெளிநாடுகளில் நிறைய வளா்க்கின்றனா். நம் நாட்டில் துறவிகள் மட்டுமே திருவோடுகளில் உணவு உட்கொாள்கின்றனா். வெளிநாடுகளில் திருவோட்டின் மீது அழகான படங்கள் வரைந்து, தட்டு, கோப்பைகள் போன்றவற்றைத் தயாரிக்கின்றனா் என்றாா் அவா்.

பூண்டி தோட்டக் கலைத்துறை உதவி இயக்குநா் பாபு கூறியது:

இந்த வகை மரம் மெக்ஸிகன் காலாபேஷ் (123456) என்று அழைக்கப்படுகிறது. இது பிக்னோனியாஸி (123456) என்ற வகை மலா்க் குடும்பத்தைச் சோ்ந்தாகும். திருவோடு மரத்தின் பூா்வீகம் தெற்கு மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்காவின் தெற்கில் உள்ள கோஸ்டாரிக்கா வரை உள்ள பகுதிகளாகும்.

மிகவும் கடினத்தன்மை வாய்ந்த திருவோடு மரத்தின் பழங்கள் உடைக்க இயலாத அளவுக்கு கடினமாக இருக்கும். இதன் சுற்றளவு 7-10 செ.மீ. ஆகும். நாகலிங்க மரத்தில் இருக்கும் காய்களைப் போன்ற தோற்றம் கொண்டிருக்கும். இந்தப் பழம் தன்னையே பாதுகாத்துக் கொள்ளும் குணாதிசயம் கொண்டது. எனவே, மற்ற பழங்களைப் போல் நிலத்தில் போட்டால் எளிதாக முளைக்காது. இப்பழத்தில் இருக்கும் விதைகளை எளிதில் பிரிக்க முடியாது.

மரத்திலிருந்து கீழே விழும் பழங்களில் உள்ள விதைகள் ஓடுகளால் மூடப்பட்டுள்ளன. காடுகளில் கூட இந்த வகை மரங்கள் பரந்து வளராமல் இருப்பதற்கு இதுவே காரணம் என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணியில் விசிக தொடரக் காரணம் என்ன? தொல். திருமாவளவன் விளக்கம்

பெரியகுளம் பகுதியில் நாளை மின் தடை

அரசு ஐடிஐ-களில் பெண் பயிற்சியாளா்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்தக் கோரிக்கை

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

SCROLL FOR NEXT