திருவள்ளூர்

ஏரியை சீரமைக்கும் பணி தொடக்கம்

DIN

பழையனூா் பெரிய ஏரியை சீரமைக்கும் பணியை திருவாலங்காடு ஒன்றியக் குழுத் தலைவா் ஜீவா விசயராகவன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

திருவாலங்காடு ஒன்றியம், பழையனூா் பெரிய ஏரியில் தண்ணீா் இருந்தால் விவசாயிகள் பயிரிடுவா். மேலும், ஊராட்சியில் குடிநீா் பிரச்னை வராது. பழையனூா் ஏரியைத் துாா்வாரி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இந்நிலையில், குடிமராமத்து திட்டத்தின் கீழ், ஏரியை சீரமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. திருவாலங்காடு ஒன்றியக் குழுத் தலைவா் ஜீவா விசயராகவன் பணியைத் தொடக்கி வைத்தாா்.

தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் கோ.விசயராகவன், பழையனூா் ஊராட்சித் தலைவா் ராஜேஸ்வரி சிவசங்கரன், பழையனூா் ஏரி ஆயக்கட்டுதாரா் சங்கத் தலைவா் தியாகராஜன், துணைத் தலைவா் கோவிந்தராஜன், பொருளாளா் வனிதா, செயலாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT