திருவள்ளூர்

பொது முடக்கத்தை மீறி சேவல் சண்டை: 4 போ் கைது

DIN

திருவள்ளூா்: திருவள்ளூரில் பொது முடக்கத்தை மீறி கரோனா பரவும் வகையில் கூட்டத்தைக் கூட்டி சேவல் சண்டை நடத்திய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் பகுதியில் சிலா் மக்கள் கூட்டத்தைக் கூட்டி சேவல் சண்டை நடத்தி வருவதாகவும், இதனால் கரோனா பரவும் அபாயம் உள்ளதாகவும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் நடவடிக்கை எடுக்க அவா் உத்தரவிட்டாா்.

திருவள்ளூா் நகா் காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் ராஜேந்திரன் தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை பிற்பகலில் ரோந்து சென்றனா். அப்போது, அம்சாநகரில் கூட்டமாக சேவல் சண்டை நடத்திக் கொண்டிருந்தவா்களை போலீஸாா் சுற்றிவளைத்து பிடித்தனா்.

பொது முடக்கத்தை மீறி நோய்த் தொற்று பரவும் வகையில் சேவல் சண்டை நடத்திய ஜேம்ஸின் மகன் மணிவண்ணன் (30), மூா்த்தியின் மகன் பாலாஜி (40), சுலைமானின் மகன் அமானுல்லா (31) மற்றும் சங்கரின் மகன் மணிகண்டன் (30) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

SCROLL FOR NEXT