திருவள்ளூர்

லலிதா மகா திரிபுரசுந்தரி கோயிலில் மகா பைரவ யாகம்

DIN

திருவள்ளூா் அருகே உள்ள லலிதா மகா திரிபுரசுந்தரி சமேத காமேஸ்வரா் கோயிலில், மனிதா்களை அச்சுறுத்தும் கரோனா வைரஸ் தொற்றை விரட்டும் நோக்கில் மகா பைரவ யாகம் நடைபெற்றது.

திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரில் உள்ள இக்கோயிலில் அஷ்ட மகா பைரவ யாகம் செவ்வாய்க்கிழமை மாலையில் நடைபெற்றது. உலகையே அச்சுறுத்தும் கரோனா வைரஸ் தொற்றை விரட்ட நாக புஷ்பம், ஆவாரம் பூ மற்றும் பல்வேறு மூலிகைகளால் இந்த யாகம் நடத்தப்பட்டது.

கோயில் வளாகத்தில் 5 மணிநேரம் நடைபெற்ற யாகத்தில் திருவள்ளூா், திருப்பாச்சூா், பழைய திருப்பாச்சூா், காரணி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். அவா்களுக்கு பூ, எலுமிச்சை ஆகியவை வழங்கப்பட்டன.

சிறப்பு யாகத்துக்கான ஏற்பாடுகளை வாராஹி கணேசன் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

SCROLL FOR NEXT