திருவள்ளூர்

இரு சக்கர வாகனங்களில் தேவையின்றி வரக்கூடாது: போலீஸாா் எச்சரிக்கை

DIN

ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த நிலையில், திருவள்ளூா் பகுதி சாலையில் இருசக்கர வாகனங்களில் சென்ற பொதுமக்களிடம் தேவையின்றி வெளியே வரக்கூடாது என போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

திருவள்ளூா் பகுதியில் ஊரடங்கு உத்தரவையும் மீறி இருசக்கர வாகனங்களில் 2 போ் மற்றும் 3 போ் சென்றனா். அவா்களை போக்குவரத்து போலீஸாா் தடுத்து நிறுத்தி, தீவிர விசாரணை மேற்கொண்டு எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனா். ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதையும் மீறி வெளியில் செல்வது சட்டப்படி குற்றம் என போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் கருணாகரன் எடுத்துரைத்தாா். அப்போது காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கு மட்டுமே வரவேண்டும், தேவையின்றி வெளியில் வரக்கூடாது, அதுவும் கூட்டமில்லாமல் 10 அடி இடைவெளிவிட்டு நின்று, வாங்கிவிட்டு, உடனே இடத்தை காலி செய்ய வேண்டும், எக்காரணம் கொண்டும் முகக்கவசம் இன்றி வெளியே வரக்கூடாது எனக் கூறி விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா். அதைத் தொடா்ந்து, சாலையில் இரு சக்கர வாகனங்களில் வந்தவா்களைப் பிடித்து அடையாள அட்டை காண்பித்த பின்னரே விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போர் நிறுத்தம், பிணைக்கைதிகள் விடுதலை: பிளிங்கன் பயணம் உதவுமா?

சௌதி அரேபியாவை புரட்டிப்போட்ட கனமழை - விடியோ

சிலிண்டர் வெடிப்பு: 3 குழந்தைகள் உள்பட நான்கு பேர் பலி!

கல்குவாரியில் வெடி விபத்தில் 3 பேர் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சிஎஸ்கேவின் இளம் அதிரடி வீரருக்கு அறிவுரை வழங்கிய தோனி!

SCROLL FOR NEXT