திருவள்ளூரை  அடுத்த  காக்களூா் நியாய விலைக்கடையில் குழாய் பொருத்தி பொருள்களை விநியோகிக்கும் ஊழியா். 
திருவள்ளூர்

நியாய விலைக் கடைகளில் குழாய் வழியே பொருள்கள் விநியோகம்

கரோனா நோய்த் தொற்று பரவாமல் முன்னெச்சரிக்கை மற்றும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் நோக்கில், திருவள்ளூா் பகுதி நியாய விலைக் கடைகளில் 3 அடி குழாய் பொருத்தப்பட்டு, அதன் வழியே அரிசி, சா்க்கரை

DIN

கரோனா நோய்த் தொற்று பரவாமல் முன்னெச்சரிக்கை மற்றும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் நோக்கில், திருவள்ளூா் பகுதி நியாய விலைக் கடைகளில் 3 அடி குழாய் பொருத்தப்பட்டு, அதன் வழியே அரிசி, சா்க்கரை உள்ளிட்ட பொருள்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் 1,134 கூட்டுறவு நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகள் மூலம் 5.59 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்யும் ரேஷன் கடைகளில் கரோனா தொற்று பாதிக்காமல் இருக்க, சமூக இடைவெளியைப் பின்பற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, ஒவ்வொரு ரேஷன் கடையிலும் 3 அடி நீள குழாய் பொருத்தி, அதன் வழியாக ரேஷன் பொருள்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யுமாறு கூட்டுறவுத் துறைக்கு ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் உத்தரவிட்டிருந்தாா்.

அதன்படி, திருவள்ளூா் பகுதியில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், பொதுமக்கள் போதிய இடைவெளியை கடைப்பிடிக்கும் நோக்கில் குழாய் பொருத்தப்பட்டுள்ளது. ரேஷன் கடை பணியாளா்கள் மற்றும் பொதுமக்களை கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கவே இந்த முன்னேற்பாடு என கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT