திருவள்ளூர்

கண்டிகையில் கிறிஸ்துவர்கள் சார்பில் பழங்குடியின மக்களுக்கு நிவாரண உதவி வழங்கல்

DIN

பூரண சுவிசேஷ ஊழியம் என்ற கிறிஸ்துவ அமைப்பை சேர்ந்த கிறிஸ்துவர்கள் சார்பில் கும்மிடிப்பூண்டி அடுத்த நேமள்ளூர் ஊராட்சியில் உள்ள தாத்தையர் கண்டிகையில் பழங்குடியின மக்களுக்கு கரோனா ஊரடங்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

நேமள்ளூர் தாத்ததையர் கண்டிகை பகுதியில் நடைபெற்ற இந்த நிவாரண உதவி வழங்கும் நிகழ்விற்கு கும்மிடிப்பூண்டி ஒன்றியக்குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், ஒன்றியக்குழு துணைத்தலைவர்  கு.மாலதி குணசேகர், நேமள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தம்மாள், ஒன்றிய கவுன்சிலர் சிவா அவர்களும் வார்டு உறுப்பினர் சிவா சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். 

நிகழ்விற்கு கிறிஸ்துவ ஊழியர்  இ.ஆரோன் பெத்தேல் சுவிஷேச திருச்சபை ஊழியர் ஏ.அருண்குமார் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினார். நிகழ்வில் சென்னை கெல்லீஸ் பகுதியை சார்ந்த கே.விக்டர், எஸ்தர் விக்டர்,எம்.கிஷோர், டார்கஸ் ,கிரேஸ் ஆஃப் ஜீசஸ் ஊழியங்களின் ஸ்தாபகர் சுவிசேஷகல் ஆல்பர்ட் சாலமன், பிந்து ஆல்பர்ட் அவர்கள் குடும்பத்தினர் நேமள்ளூர் பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்களுக்கு நிவாரண உதவிகளை ஏற்பாடு செய்து நிகழ்வில் பங்கேற்றனர்.

தொடர்ந்து கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார், துணை தலைவர் மாலதி குணசேகரன் பொதுமக்களுக்கு அரிசி, மளிகை பொருட்களை நிவாரணமாக வழங்கினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT