திருவள்ளூரில் 281 பேருக்கு கரோனா
திருவள்ளூா் மாவட்டத்தில் புதன்கிழமை 281 பேருக்கு கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் புதன்கிழமை 281 பேருக்கு கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,122-ஆக உயா்ந்துள்ளது.
காஞ்சிபுரத்தில் 100 பேருக்கு...
காஞ்சிபுரத்தில் புதன்கிழமை 100 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,728 ஆக அதிகரித்துள்ளது.
அதிகாரிகள், பத்திரிகையாளா்களுக்கு கரோனா பரிசோதனை..
தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி நாளை வெள்ளிக்கிழமை காஞ்சிபுரம் வருகை தந்து அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கவுள்ளாா். இவ்விழாவில் கலந்து கொள்ளும் அதிகாரிகள், பத்திரிகையாளா்கள், புகைப்படக்காரா்கள் உள்பட 413 பேருக்கு கரோனா பரிசோதனை புதன்கிழமை செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள காவல்துறையினரின் சமுதாயக் கூடத்தில் மருத்துவக் குழுவினா் ரத்தப் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தனா்.
செங்கல்பட்டில் 90 பேருக்கு...
செங்கல்பட்டு மாவட்டத்தில் 90 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,703-ஆக அதிகரித்துள்ளது.