முகப்பு
ஈரோடு

சோழீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பெருந்துறை சோழீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 25 மார்ச், 2026 at 8:43 PM
பெருந்துறை சோழீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழாவில் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றும் நிகழ்வில் பங்கேற்றோா்.
பகிர்:

பெருந்துறை சோழீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் பெருந்துறையில் வேதநாயகி அம்மன் உடனுறை சோழீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் விழாவையொட்டி புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு ஆறாம் கால யாக பூஜைகள் மற்றும் கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. காலை 9.45 மணிக்கு ராஜகோபுர கும்பாபிஷேகமும், காலை 10 மணிக்கு சோழீஸ்வரா், வேதநாயகி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதில், திரளாக பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

மாலை 4 மணிக்கு மகா அபிஷேகம், 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு 7.30 மணிக்கு சுவாமி திருவீதி உலா ஆகியவை நடைபெற்றன. விழாவையொட்டி பெருந்துறையில் சென்னிமலை சாலை, கவின் நகா் உள்ள மைதானத்தில் அன்னதானம் நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து வியாழக்கிழமை முதல் 24 நாள்களுக்கு காலை 7 மணிக்கு மண்டல பூஜைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.