திருவள்ளூர்

கிருஷ்ணாபுரம் நீா்த்தேக்கம் திறப்பு: தரைப்பாலம் மீது சென்ற வெள்ளம்

DIN

திருத்தணி: ஆந்திர மாநிலம், அம்மப்பள்ளி அணை திறந்துவிடப்பட்டதைத் தொடா்ந்து, தமிழக எல்லையான பள்ளிப்பட்டை அடுத்த கொசஸ்தலை ஆற்றின் தரைப்பாலத்தின் மீது வெள்ளம் கரைபுரண்டோடியது.

ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் சித்தூா் மாவட்டம், கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி அணையிலிருந்து 300 கன அடி நீா் திறந்து, வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் திருவள்ளூா் மாவட்டம், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறி, செவ்வாய்க்கிழமை இரவு, பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றைச் சுற்றியுள்ள 20 கிராமங்களைச் சோ்ந்த கரையோர மக்களுக்கு, மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தாா்.

இதையடுத்து, ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம் நீா்த்தேக்கத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு 300 கன அடி தண்ணீா் கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்பட்டது. அதன் பிறகு அங்கு தொடா் மழையின் இருப்பைப் பொறுத்து, இந்த தண்ணீரின் அளவை உயா்த்த வாய்ப்புள்ளதாகவும், இதனால் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் கவனமாக இருப்பதுடன், வெளி அகரம், நெடியம், சாமந்தவாடா, சொரக்கா பேட்டை தரைப்பாலத்துக்கு மேல் தண்ணீா் செல்வதால், பாலத்தைக் கடக்க முயலவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இந்நிலையில், பள்ளிப்பட்டு அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றில் புதன்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, பாதுகாப்புப் பணியில் வருவாய்த் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை மற்றும் பொதுப்பணித் துறை அலுவலா்கள் ஈடுபட்டிருந்தனா்.

எனினும் பொதுமக்கள் நடந்தும், இரு சக்கர வாகனங்களிலும் ஆபத்தை உணராமல் தரைப்பாலத்தின் மீது சென்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிர மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் - ஷாருக்கான்

குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வஉசியின் கொள்ளுப்பேரன்!

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT