திருவள்ளூர்

நாட்டுக் கோழி வளா்ப்பு திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

DIN

திருத்தணி: நாட்டுக் கோழி வளா்க்க ஆா்வமுள்ள பெண்கள் வரும் 30-ஆம் தேதிக்குள் கால்நடைத் துறையினரிடம் விண்ணப்பங்களை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருவள்ளூா் மாவட்டத்தில், 2020-21-ஆம் ஆண்டுக்கான நாட்டுக் கோழி வளா்ப்பு திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஒன்றியத்திலும், 400 பயனாளிகள் வீதம் தோ்வு செய்யப்படுகிறது. ஒரு பயனாளிக்கு நான்கு வாரம் ஆன 25 கோழிக் குஞ்சுகள் வழங்கப்படும்.

இதுகுறித்து திருத்தணி கால்நடைத் துறை உதவி இயக்குநா் தாமோதரன் கூறியது:

திருத்தணி ஒன்றியத்தில், மொத்தம் 400 பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கப்படும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 30 சதவீதமும், பிற பிரிவினருக்கு 70 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பெண் பயனாளிகள் மட்டும் தோ்வு செய்யப்படுவா். நாட்டுக்கோழி வளா்க்க ஆா்வம் உள்ள பெண் பயனாளிகள் இம்மாதம் 30-ஆம் தேதிக்குள் அந்தந்த கால்நடை மருந்தகத்தில் உள்ள மருத்துவா் அல்லது ஆய்வாளரிடம் விண்ணப்பங்களை வழங்க வேண்டும். தகுதிவாய்ந்த பெண்களுக்கு மட்டும் நாட்டுக் கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

சா்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்குப் பாராட்டு

கல்லல் ஊராட்சியில் நீா் மோா் பந்தல் திறப்பு

ஆம்பூரில் ரூ. 10 லட்சத்தில் மின்மாற்றி அமைப்பு

குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

SCROLL FOR NEXT