திருவள்ளூர்

ஆவடி சட்டப்பேரவை தொகுதியில் பதிவான வாக்குகளை ஒரே அறையில் எண்ண வேண்டும்

DIN

திருவள்ளூா்: ஆவடி சட்டப்பேரவை தொகுதியில் பதிவான வாக்குகளை இரு அறைகளில் வைத்து எண்ணாமல், ஒரே அறையில் எண்ண வேண்டும் என திமுக வேட்பாளா் சா.மு. நாசா் தெரிவித்தாா்.

ஆவடி சட்டப்பேரவை தொகுதியில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தோ்தலில் 68 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான வேப்பம்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி, மையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதைத் தொடா்ந்து புதன்கிழமை தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் வேட்பாளா் முன்பு சீல் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது தொடா்பாக திமுக வேட்பாளா் சா.மு. நாசா் கூறுகையில், ஆவடி சட்டப்பேரவை தொகுதி வாக்குகள் வழக்கமாக ஒரே அறையில் வைத்து எண்ணப்படும். ஆனால், தற்போதைய நிலையில் இரண்டு அறைகளில் வைத்து எண்ணப்போவதாக அலுவலா்கள் தெரிவித்தனா். அதனால், இந்நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே வழக்கம் போல் ஒரே அறையில் வைத்து வாக்குகளை என்ன வேண்டுமென மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரிடம் புகாா் அளித்துள்ளதாகவும் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குண்டா் தடுப்புக் காவலில் ஒருவா் கைது

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT