திருவள்ளூர்

வாக்கு எண்ணும் மையத்தில் 500 போலீஸாா் பாதுகாப்பு

DIN


திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே தனியாா் பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் 500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. அதேபோல், திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும், திருவள்ளூா் அருகே வேப்பம்பட்டு கிராமத்தில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு தொகுதி வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைத்து பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்ட அறையின் முன்புறம் ராணுவத்தினா் உள்ளிட்ட 3 அடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இதில், திருவள்ளூா் மாவட்டக் காவல் துறை மூலம் துணைக் காவல் கண்காணிப்பாளா், காவல் ஆய்வாளா்கள் என 500 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT