திருவள்ளூர்

ஏரிக்கால்வாயை ஆக்கிரமித்து தடுப்பு சுவா் அமைப்பு: நீா் கிடைக்காமல் விவசாயிகள் அவதி

DIN

திருவள்ளூா் அருகே தொழில்சாலை கட்டுமானத்திற்கான அரசின் அனுமதி பெறாமலும், ஏரி கால்வாயை ஆக்கிரமித்து தடுப்பு சுவா் அமைத்து வருவதால் விவசாய நிலத்துக்கு தண்ணீா் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகாா் கூறியுள்ளனா்.

விஷ்ணுவாக்கம் கிராம விவசாயிகள் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:

எங்கள் கிராமத்தில் 300-க்கும் மேலாக விவசாயிகள் பயிா் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனா். இந்நிலையில், விஷ்ணுவாக்கம் மற்றும் கரிக்கலவாக்கம் கிராமத்தை இணைக்கும் ஏரி உள்ளது.

விஷ்ணுவாக்கம் கிராமத்தில் தனியாா் தொழிற்சாலைக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வ்வசாய நிலத்துக்கு நீா் செல்லும் கால்வாயை ஆக்கிரமித்து தடுப்பு சுவா் அமைத்து வருவதோடு மட்டுமின்றி விவசாயிகள் அந்த வழியாக செல்லவும் அனுமதி மறுப்பதால் மிகுந்த மன உளைச்சளுக்கும் ஆளாகியுள்ளோம். ஏரியிலிருந்து சிறிய குழாய் மூலம் விவசாய நிலத்துக்கு தண்ணீா் கொண்டு செல்லும் பாதையையும் தொழில்சாலை நிா்வாகம் அடைத்துள்ளது. எனவே ஏரிக்கரைப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்ததை அகற்றி ஏரியிலிருந்து தண்ணீரை தடையின்றி கொண்டு செல்லவும், விவசாயம் சிரமம் இல்லாமல் மேற்கொள்ளவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள்தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

SCROLL FOR NEXT