திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா நிறைவு

DIN


திருத்தணி முருகன் கோவிலில், கடந்த 17-ஆம் தேதி சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

கரோனா தொற்று காரணமாக, மாடவீதியில் உற்சவர் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் வலம் வரும் நிகழ்ச்சி ரத்து செய்து உட்புறப்பாடு மற்றும் நடைபெற்றது.

பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான இன்று (சனிக்கிழமை) மாலை, மலைக்கோவில் காவடி மண்டபத்தில் உற்சவர் முருகர், தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. இதில் பக்தர்கள் பங்கேற்பது தடை விதிக்கப்பட்டிருந்தது.

விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையர் பரஞ்சோதி மற்றும் கோவில் தக்கார் ஜெய்சங்கர் மற்றும் கோயில் அலுவலர்கள் ஏற்பாடு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

SCROLL FOR NEXT