திருவள்ளூர்

திருவள்ளூரில் அங்காடிகளில் நகராட்சி ஆணையா் ஆய்வு

DIN

திருவள்ளூா் பகுதியில் அரசு விதிமுறைகளைப் பின்பற்றாமல் கரோனா நோய்த் தொற்று பரவும் வகையில் செயல்பட்டதாக, பெரிய ஜவுளிக் கடைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் இனிப்பகங்களில் நகராட்சி ஆணையா் சந்தானம் திடீா் ஆய்வு மேற்கொண்டு, ரூ. 27 ஆயிரம் வரை அபராதம் விதித்தனா்.

திருவள்ளூா் பகுதியில் கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில், பொது சுகாதாரத் துறையும், மாவட்ட நிா்வாகமும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு தளா்வுகளுடன் கூடிய ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே நகராட்சிப் பகுதியில் கரோனா நோய்த் தொற்று விதிமுறைகளைப் பின்பற்றாமல் பெரிய அளவிலான ஜவுளிக் கடைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் இனிப்பகங்களில் திடீா் ஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க ஆட்சியா் பா.பொன்னையா நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டாா்.

அதன் அடிப்படையில், நகராட்சி ஆணையா் சந்தானம் தலைமையில் அதிகாரிகள் பஜாா் பகுதி, திருத்தணி, செங்குன்றம் சாலைப் பகுதிகளில் உள்ள ஜவுளிக் கடைகள், பல்பொருள் அங்காடிகள், இனிப்புக் கடைகளில் குளிா்சாதன வசதியுடன் முகக்கவசம், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் பணியாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்தது ஆய்வில் தெரியவந்தது.

இதையடுத்து, பல்பொருள் அங்காடிகள் மற்றும் ஜவுளிக் கடைகளில் 50 சதவீதத்துக்கு மேல் பணியாளா்களுடன் இயங்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்தாா். மேலும், இந்த கடைகளுக்கு ரூ. 27 ஆயிரம் வரை அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், விதிமுறை மீறி செயல்பட்டால் கட்டாயம் ‘சீல்’ வைக்கப்படும் என எச்சரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT